சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக அகற்றுமாறு சம்பிக்க உத்தரவு

203 0

நீர் ஓடைகள் மற்றும் நீர் வடிகாலமைப்புக்கு இடைஞ்சலாக காணப்படும் கட்டடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்புக்கு பெய்த கடும் மழை காரணமாக களனி கங்கையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கொலன்னாவை, கடுவலை, வத்தலை மற்றும் களனி பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய நகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கு அறிவிப்பு செய்த பின்னர் கட்டடங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பிரதிநிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.