முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி; ஐயாயிரம் குடும்பங்கள் பாதிப்பு

381 0

முல்லைத்தீவு கடற்பரப்பில்  சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மீன்பிடி தொடர்பில் ஜனாதிபதி தொடக்கம்இ அனைவருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படவில்லை என கவலைவெளியிட்டுள்ளனர்.

கடலிலே வெளிச்சம் போட்டு மீன் பிடிக்க கூடாது என்பது சட்டம் எனவும் எனினும் முல்லைத்தீவு கடற்பரப்பு இரவு நேரங்களில் திருவிழா போன்று சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வருவதாகவும்  அதனை தடுப்பதற்கு அதிகாரிகள் தவறி வருவதாகவும்இ அந்தோனிப்பிள்ளை மரியராசா குற்றம்சுமத்தியுள்ளார்.

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.