தேசிய இளைஞர் தினம் முல்லையில் வெகு விமர்சையாக அனுஸ்ரிப்பு

441 0

தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் ஏற்ப்பாடு செய்யத தேசிய இளைஞர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்றது

அந்த வகையில் தூய்மையான இலங்கைக்கு இளைஞர்களின் குரல் என்ற தொனிப்பொருளில் இன்று காலை முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்து ஊர்வலமாக பதாதைகளை தாங்கியவாறு விழிப்புணர்வு ஊர்வலமொன்றை நடாத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ளுடுசுஊ அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெற்றது.

இதன் போது சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சுவரொட்டிகளை ஒட்டியதோடு வாகனங்களிலும் அது தொடர்பான ஸ்ரிக்கர்களை ஒட்டியவாறே அந்த பேரணி முல்லைத்தீவு ளுடுசுஊ மண்டபத்தை வந்தடைந்ததும் அங்கே அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அத்தோடு இந்த நிகழ்வை முன்னிட்டு இரத்த தான நிகழ்வுகளும் ஏற்ப்பாடு செய்யபட்டது. இங்கே மாவட்ட இரத்த வங்கியினர் வருகை தந்து இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய உதவி மாவட்ட செயலாளர் செல்வி லதுமீரா மற்றும் தேசிய இளைஞர் மன்றத்தினுடைய மகரகம தேசிய காரியாலயத்தினுடைய உதவி பணிப்பாளர் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினுடைய முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய உதவி பணிப்பாளர் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி உட்பட்ட அதிதிகள் பலரும் இளைஞர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.