இளைஞர் கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

392 0

Court order_CI2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் காணாமல் போன 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களின் வழக்கு இன்று கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் இதன்போது சட்ட மா அதிபர் தரப்பில் இருந்து யாரும் முன்னிலையாகி இருக்கவில்லை.

இந்த நிலையில் பிஸ்கால் அதிகாரிகளின் ஊடாக, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் விடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கடமை என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கடத்தல்களுடன் கடற்படையைச் சேர்ந்த சிலரும் தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் கடந்த வருடம் முன்னாள் காவற்துறை பேச்சாளர் கபித்தான் டி.கே.பி. தஸநாயக்கவிடமும் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.