நுவரெலியா ஹட்டன் புஸ்ஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்கள், புஸ்ஸல்லாவ நகரத்தின் ஒரு பகுதியில், நேற்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் தேங்கியிருந்த பொலித்தின் பைகளும் மாணவர்களால் அகற்றப்பட்டன.
ஹட்டன் புஸ்ஸல்லாவ இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் கே.இந்துராணி தiமையில் இடம்பெற்ற இச் செயற்திட்டத்தில், புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸார் உட்பட பாடசாலையின் ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர்.
இதன்போது பெருமளவிலான பொலித்தீன்¸ டெங்கு உருவாக கூடிய பொருட்கள் அகற்றப்பட்டன.