இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,
கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளத்தைக்கொண்டதும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகவும் காணப்படும் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவுப் பகுதியில் கடந்த 1992ம் ஆண்டு யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் யுத்தம் நிறைவு பெற்று எட்டு வருடங்களாகியும் அவர்களது சொந்த நிலத்தில் மீள்குடியேறவோ அல்லது அங்கு சென்று தொழில் செய்வதற்கோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள இரணைதீவு மக்கள் தங்களை தமது சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொண்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் 25வது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.