நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சஷீ வீரவங்சவின் அடையாள அட்டை மாயம்!

376 0

சஷீ வீரவங்சவின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஷீ வீரவங்சவின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளது.எனவே, விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு பிரதி சொலிசிட்டர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குடியுரிமை மற்றும் குடிவரவுத் திணைக்களத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச் சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சஷி வீரவங்ச கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சஷி வீரவங்சவின் கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.