மோடி – எடப்பாடி சந்திப்பு

288 0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அவர்களுக்கிடையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக வறட்சி நிவாரணம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தமிழக பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்தார்.

கடந்த வாரம் இந்திய பிரதமரை, ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து, தமிழக முதல்வர் மற்றும் பிரதமருக்கிடையிலான இந்த சந்திப்பானது தமிழ அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் இந்திய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழக ஆளுங்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மோடி சந்தித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.