டொனால்ட் ட்ரம்ப் – பரிசுத்த பாப்பரசர் சந்திப்பு

198 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வணக்கத்துக்குரிய பரிசுத்த பாப்பரசர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று வத்திகான் நகரில் இடம்பெற்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது அவர்களுக்கிடையில், சிறிது நேர கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான பயணத்தில் தற்போது உள்ளார்.

முன்னதாக அவர் சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு நிறைவு செய்திருந்தார்.

இதன் அடுத்த கட்டமாக அவர் தற்போது இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.