இராணுவ சட்டம்

221 0

பிலிப்பின்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டேவினால் அந்த நாட்டின் தீவான மின்டானாவோவில் இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, இந்த சட்டம் அங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டனர்.

மின்டானாவோ தீவு, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய போராளிகளின் இல்லமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவுக்கான தமது விஜயத்தை இடையில் நிறைவு செய்து நாடு திரும்ப முன்னர், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இராணுவச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் இன்றி யாரை வேண்டுமானாலும், கைது செய்து தடுத்து வைக்க இராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.