பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை எமிரெட்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு அந் நாட்டில் தங்கியுள்ள 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்.

