சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது(காணொளி)

424 0

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலகங்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருமான க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த தலைவர் பாஸ்கரன், சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனனதினத்தை விசேட தினமாக கொண்டு சுவாமி தொடர்பில் இளம் சமூகம் மத்தியில் கொண்டுசெல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதா தெரிவித்தார்.

சுவாமியின் 125வது ஜனன தினத்தை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் போட்டிகளும் பல்வேறு மட்டத்தில் நடைபெற்றுவருவதாகவும் இதன் இறுதி நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.