கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி 26 மணி நேரத்தில் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த ஸ்பெயின் வீரர்

245 0

கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி 26 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஸ்பெயின் வீரர் சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் இலியன் ஜோர்னெட். சமீபத்தில் இவர் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

26 மணி நேரத்தில் ஒரே மூச்சில் ஏறி முடித்து சாதனை படைத்தார். அதுவும் கயிறு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறினார்.

இவர் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரம் மீது ஏறினார். நேற்று முன்தினம் இவர் மட்டும் பாறைகளை பிடித்து தனியாக ஏறினார்.

இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் அதிவேகமாக ஏறிய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன்பு பிளங்க், தி மாட்டார்கார்ன், தெனாலி, அகான்காகுவா மற்றும் கிளிமரிஞ்சரோ உள்ளிட்ட மலை சிகரங்களில் அதிவேகமாக ஏறி பல சாதனைகள் படைத்துள்ளார்.