“நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள்!” – விஜய் மீது டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்

6 0

“நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கின்றோம், நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள். இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்” என தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்தார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி கூறியது: “புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் திமுக உடன்பிறப்புகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் புதுச்சேரியின் நிலவரத்தை கேட்டு அறிந்து கொண்டிருக்கிறார். திமுகவை கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளை எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்” என்றார்.