கிரிக்கெட் செய்திகள்

371 0

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

மென்செஸ்ட்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து, இந்த போட்டிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எதிர்வரும் ஜுலை மாதம்
ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

லங்காஷெயார் பிராந்திய அணியில் விளையாடி வரும் அவர் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் உடல்தகுதி சோதனையின் பின்னரே இந்த போட்டியில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அயர்லாந்தில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரில் நியுசிலாந்து மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று டப்லின் மைதானத்தில் நடைபெறவுள்ளது.