வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

338 0

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருமன்காடு பகுதியில் இருந்து வந்த பட்டா வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில், வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.