யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கு தமிழ் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது(காணொளி)

308 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வித்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிப்பதற்கு தமிழ் பேசும் நீதிபதிகள் மூவர் பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில், யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நியமக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய விசேட ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனினும், ரயல் அட் பார் முறையிலான வழக்கு விசாரணைகளுக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்பதுடன், இன்றையதினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்ப்பட்ட சந்தேக நபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.