கூட்டு எதிர்கட்சியினரின் கோஷங்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது

383 0

6066480428_568a21198a_zகூட்டு எதிர்கட்சி பேரணியின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு எதிரான கோஷங்கள் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் சந்திம வீரக்கொடி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டார்.
நாட்டின் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகம் முன்னால் பேரணி சென்ற போது பேரணியில் பங்கேற்றோர் கூச்சலிட்ட சம்பவத்தை ஏற்று கொள்ள முடியாது.
அதேநேரம் எட்டு வயது சிறுவன் ஒருவரை தோளில் சுமந்தப்படி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பேரணியில் சென்றதும் அந்த சிறுவனிடம் ஏனையோர் கோஷங்களை கூறுமாறு அறிவுறுத்தி அந்த சிறுவன் கோஷங்களை எழுப்பியதும் மோசமான நடைமுறையாகும்.
இது கலாசாரத்துக்கு பாரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய சம்பவமாகும்.
நாட்டை காப்பாற்றிய தந்தை என்ற அப்பச்சியாக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்று கொண்ட போதும் நாமல் ராஜபக்ஷவின் இந்த செயற்பாடு கண்டிக்க தக்கது என அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு கெம்பல் மைதானத்தை வழங்க ஜனாதிபதி இணங்கிய போதும் அதனுடன் ஒப்பிடும் போது 25 வீதமான சனத்திரலையே கொள்ளக்கூடிய லிப்டன் சுற்று வட்டத்தை கூட்டு எதிர்கட்சி தீர்மானித்திலிருந்து பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.