அபிவிருத்தியின் புதுப் பொழிவுக்காகவே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமான நிகழ்வினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

