“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 6 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

964 0

புலம்பெயர்ந்து பிறந்துவளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 6 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” எனும் சிறுவர்களின் ஆக்கம் கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.முள்ளிவாய்க்கால் பெரும்வலியை எடுத்துரைக்கும் கவிதைகள்,தமிழனை தலைநிமிர வைக்கும் எமது தேசியத்தலைவரின் படங்களை, தமிழீழ வரைபடத்தை, விடுதலையின் அவசியத்தை உணர்த்தும் சித்திரங்களை உள்கொண்டதாக இவ்வருட “முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 6 நேற்றைய தினம் பேர்லின் நகரத்தில் வெளியிடப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் மண்ணிலே கொடூரமாக கொல்லப்பட்ட அனைத்து உறவுகளையும், அந்த மண்ணுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் வணங்கி மலர்வணக்கம் செலுத்தப் பட்டது.