இலங்கை அமைச்சரவையில் மாற்றம்

311 0

இலங்கை அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் மற்றும் ஒரு ராஜாங்க அமைச்சுகளில் இவ்வாறு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய அமைச்சரவையில் முன்னர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர புதிய அமைச்சரவை மாற்றத்தின் படி நிதி மற்றும் ஊடக அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த அர்ஜூன ரணதுங்கவுக்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத்துறை அமைச்சராக பதவி வகிந்த ஷந்திம வீரகொடிக்கு  தொழில் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் துறைமுக அபிருத்தி அமைச்சு மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் அமைச்சு பதவியில் இருந்து விலகிய திலக் மாரப்பனவுக்கு புதிய அமைச்சரவையில் விசேட அபிவிருத்தி அமைச்சு பதவி  வழங்கப்பட்டுள்ளது.

ஊடக துறை அமைச்சராக இருந்த கயந்த கருணாதிலக்கவுக்கு புதிதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சரான எஸ்.பி திஸாநாயக்கவுக்கு மேலதிகமாக புதிய மலைநாட்டு பாரம்பரிய அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சரான டிபிள்யூ.டி.ஜே செனவிரட்னவுக்கு மேலதிகமாக சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனிடையே, மீன்பிடிதுறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக்கு மேலதிகமாக மஹாவெலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.