ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

254 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

இதில் பங்கேற்க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்ற நிலையில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.