போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்படும் காவற்துறையினருக்கு விசேட பயிற்சிகள்

325 0

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்படும் காவற்துறையினரின் பாதுகாப்பிற்காக, அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, போதைப்பொருள் குறித்து கிடைக்கும் தகவல் மற்றும் செல்லவேண்டி பிரதேசம் குறித்தும் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.