இராஜதந்திரிகள் மத்தியில் இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் ஆராய்வுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகிக்க முடியாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களில் பணியாற்றுபவர்களில் இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிய வெளிவிவகார அமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னா உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஆராய்வுப் பணிகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுகின்றது.

