கணவனை கடத்தியவர்கள் உயிருடன் உள்ளார்கள்; கணவன் தொடர்பில் தகவல் இல்லை

329 0

தனது கணவரை கடத்தியவர்கள் இனறும் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் கடத்தப்பட்ட தனது கணவன் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என மனைவி ஒருவர் கவலைவெளியிட்டுள்ளார்.

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டடுள்ள தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறுகோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் 76  ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது கணவன் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தனது கணவனை தேடி வரும் மனைவி ஒருவர் கவலை வெளியிட்டார்.

தனது கணவர் உயிருடன் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தபோதும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என கணவனை தேடிவரும் மற்றுமொருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் தொடர் போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.