கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
எச்.எம்.சி.எஸ் வின்னிபெக் (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இந்தோ ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஆறு மாதங்கள் தரித்து நிற்கவுள்ள கனேடியப் போர்க்கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
இதன்போது சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளிலும் கனேடியக் கடற்படையினர் ஈடுபடவுள்ளனர்.

