உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட முடியாது – டலஸ்

241 0

2019 ஆம் ஆண்டு வரையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்படும் என வடமத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ள போதிலும் அவ்வாறு பிற்போட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அவ்வாறு காலம் தாழ்த்த ஒருபோதும் முடியாது என குறிப்பிட்டார்.

இவ்வாறு காலம் தாழ்த்துவதென்றால் இரண்டு முறைகளே உள்ளன.

ஒன்று அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி, அவசரகால சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஜனாதிபதிக்கு பிற்போட முடியும்.

இரண்டாவது உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தை திருத்துவதன் மூலம் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பித்து, அதன் மூலம் எல்லை நிர்ணய குழு அமைப்பதன் மூலம் பிற்போட முடியும்.

இதனை தவிர எழுந்தமான முறையில் தேர்தலை பிற்போட முடியாது எனவும் டலஸ் அழகபெரும குறிப்பிட்டார்.