இரட்டை குடியுரிமை உள்ள எம்.பிக்களின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்!

242 0

இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமையை கொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் முழு நாட்டுக்கும் வெளியிட உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் குடியுரிமை பற்றிய தகவல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கோரியிருந்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்இ அடுத்த 14 நாட்களுக்குள் தகவல்கள் கிடைக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்ததும் ஊடக சந்திப்பு மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் பகிரங்கப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் எனில் மக்கள் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன் தேவை என்றால் வாக்காளர்களுக்கு நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் எனவும் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.