அடுத்தவாரம் அமைச்சரவையில் மாற்றம்!

211 0

அமைச்­ச­ரவை அடுத்த வாரம் நிச்­ச­ய­மாக மாற்றம் அடையும். அமைச்­ச­ரவையை மாற்றம் செய்­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தற்­போது உரித்­தா­கி­யுள்ள அமைச்சு பத­விகளை சுதந்­திரக் கட்­சி­யினர் பறித்­தெ­டுப்பார்களாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான நவீன் திசா­நா­யக்க தெரி­வித்தார்.

இதே­வேளை நிதி அமைச்­ச­ராக செயற்­ப­டு­வ­தாயின் பூரண சுதந்­திரம் வழங்க வேண்டும். எனக்கு நிதி அமைச்சு கிடைக்­க­பெ­றாது. நான் பதவி மோகம் கொண்­டவன் அல்ல.தற்­போது சிறந்த நிதி அமைச்சர் உள்ளார். அத்­துடன் எந்த அமைச்சு மாற்றம் காணும் என்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே அறிவர். தற்­போ­தைக்கு வெளி­யா­கி­யுள்ள தகவல் முற்­றிலும் தவ­றாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெ­று­வது நிச்­ச­ய­மாகும். அடுத்த வார­ம­ளவில் நிச்­சய­மாக அமைச்­ச­ரவை மாறும். அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து எமக்கு எதுவும் தெரி­யாது. எந்த அமைச்சு வேண்­டு­மா­னாலும் மாற்றம் அடை­யலாம். அது ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் மாத்­தி­ரமே தெரியும். இதற்கு முன்­னரும் அமைச்­ச­ரவை மாற்­றங்கள் இடம்­பெற்­றன. 1990 ஆம் ஆண்டு கூட அமைச்­ச­ரவை மாறி­யது.அதன் போது ரண­சிங்க பிரே­ம­தாச எனது தந்­தையை அமைச்சு பத­வியில் இருந்து நீக்­கினார்.

அமைச்­ச­ரவை மாற்றம் நட்­பு­றவின் பிர­கா­ரமே முன்­னெ­டுக்­கப்­படும். எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மிகவும் நட்­பு­ற­வுடன் அநீதி ஏற்­ப­டாமல் முன்­னெ­டுப்பர். தற்­போது ஐக்­கிய தேசியக் கட்சிக்கு எத்­தனை அமைச்சு பத­விகள் உள்­ளன.சுதந்­திர கட்­சிக்கு எத்­தனை அமைச்சு பத­விகள் உள்­ளன என்­ப­தனை நாட்டு மக்­க­ளுக்கு நன்­றாக தெரியும்.

எனவே அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தற்­போதுள்ள அமைச்சு பத­வி­களில் மாற்றம் ஏற்­படக் கூடாது. அதே­போன்று சுதந்­திரக் கட்­சிக்கு தற்­போது ஒதுக்­கப்­பட்­டுள்ள அமைச்சு பத­விகளில் மாற்றம் ஏற்­ப­ட­கூ­டாது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்சு பத­வி­களை சுதந்­திரக் கட்சி பறிக்க கூடாது. அதே­போன்று சுதந்­திரக் கட்­சியின் அமைச்சு பத­வி­களை ஐக்­கிய தேசியக் கட்சி பறிக்க கூடாது. அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது ஒவ்­வொரு கட்­சியும் தன்­னு­டைய கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தி­லேயே கண்ணும் கருத்­து­மாக இருக்கும்.

ஆகவே அமைச்­ச­ரவை மாற்றம் நீதி­யான முறையில் நடக்க வேண்டும். கட்­சியின் கொள்­கைக்கு மாறாக எம்மால் செயற்­பட முடி­யாது என்றார்.

இதன்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்வி எழுப்பும் போது,

கேள்வி: – உங்­க­ளுக்கு நிதி அமைச்சு கிடைக்க போவ­தாக தக­வல்கள் கூறு­கின்­றன. அது உண்­மையா?

பதில்: – நிதி அமைச்சு எனக்கா? இல்லை. நான் பதவி மோகம் பிடித்­தவன் அல்ல. நிதி அமைச்சு என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. தற்­போதை நெருக்­க­டியில் நிதி அமைச்­சினை பெறாமல் இருப்­பது சிறந்­தது. அத்­துடன் நிதி அமைச்­சினை எனக்கு தந்­தாலும் அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்கு பூரண சுதந்­திரம் கிடைக்க வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­த­னவின் ஆட்­சியின் போது நிதி அமைச்­ச­ராக செயற்­பட்ட சிறினால் டி மேல் சுதந்­தி­ர­மாக செயற்­பட்டார். எனினும் பிற்­பட்ட காலப்­ப­கு­தியில் நிலைமை மாறி­யது. மேலும் முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்கஇ மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் நிதி அமைச்சை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்­தனர். அது தவ­றாகும். எனினும் தற்­போது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அந்த நிலை­மையை மாற்றி திற­மை­யான நிதி அமைச்சர் ஒரு­வரை தெரிவு செய்­துள்­ளனர். ரவி கரு­ணா­நா­யக்க அமைச்சு பத­வியை பொறுப்­பேற்கும் போது பல நெருக்­க­டிகள் இருந்­தன. எனினும் தற்­போது சாத­க­மான நிலை­மைக்கு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளார்.

கேள்வி: – நிதி அமைச்சருக்கும் உங்களுக்கும் முரண்பாடு காணப்பட்டதே?

பதில்: – எமக்கு பிரச்சினை இருந்தது. கொள்கை ரீதியாக நாம் பிளவுப்பட்டோம். எனினும் அதனை நாம் அமைச்சரவைக்குள்ளே தீர்த்து கொண்டோம். அமைச்சரவையின் கூட்டு பொறுப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நாம் செயற்படவில்லை என்றார்.