வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவது அவசியம் – பிரதமர்

296 0

வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வெற்றி கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வடமாகாணமே பின்னடைவில் உள்ளது.

நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் நூற்றுக்கு 6 வீதத்திற்கும் அதிக வளர்ச்சியை பொருளாதாரம் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு பொருளாதாரத்தில் நூற்றுக்கு 6 வீத வளர்ச்சியை கொண்டிருப்பதற்கு, வடக்கின் பொருளாதார மேம்படுத்தல்களை தோற்றுவிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், நெடுங்காலமாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்த வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை தற்போது கட்டியெழுப்ப சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.