சட்டசபைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

45 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.

இந்நிலையில் தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.