இறுதி போட்டிக்கு மும்பை தெரிவு

317 0

10வது இந்தியன் பிரிமியர் லீக்கின் இறுதி போட்டியில் விளையடும் தகுதியை மும்பை இன்டியன்ஸ் அணி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் மும்பை இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

பெங்களுரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் கொல்கட்டா நைட் ரைட்ர்ஸ் அணிக்கு துடுப்பாட வாய்ப்பளித்தது.

இதன்படி, கொல்கட்டா அணி 18.5 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலளித்த மும்பை இன்டியன்ஸ் அணி 14.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி, நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் முப்பை இன்டியன்ஸ் அணி, புனேரைசிங் சுப்பர்ஜெயிட் அணியுடன் மோதவுள்ளது.