யுக்ரேன் குற்றச்சாட்டை ரஸ்யா நிராகரிப்பு

248 0

யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரெசென்கோவின் உத்தியோக பூர்வ இணைய தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ரஸ்யா நிராகரித்துள்ளது.

யுக்ரேன் ஜனாதிபதியின் இணையத்தளம் கடந்த 17ஆம் திகதி சைபர் தாக்குதலுக்கு இலக்கானது.

அதனை ரஸ்யாவே மேற்கொண்டதாக யுக்ரேன் குற்றச்சாட்டியிருந்தது.

யுக்ரேனில் பிரசித்தமான ரஸ்ய இணையத்தளங்கள் சிலவற்றை தடை செய்ய யுக்ரேன் ஜனாதிபதி அண்மையில் தீமானித்தார்.

அதற்கு பழிதீர்க்கும் வகையிலேயே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக யுக்ரேன் குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தம்மீதான குற்றச்சாட்டை ரஸ்யா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.