ரெம்சன் வைரஸால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது.

303 0

உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ரெம்சன் (Remson) வைரஸ் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காரணப்படுகின்றது.

கணினி அவசர நடவடிக்கை பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

99 நாடுகளின் கணினி வலையமைப்பில் தாக்கம் செலுத்தியுள்ள இணைய மென்பொருள் தாக்குலால் இலங்கையின் கணினி வலையமைப்பில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும் அந்த வைரஸ் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த இணைய மென்பொருள் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக, மின்னஞ்சல் தகவல்களை திறந்து பார்வையிடும்போது அவதானமாக இருக்குமாறு கணினி அவசர நடவடிக்கை பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.