முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் (காணொளி)

341 0

இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை சுவாமிநாதன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.