தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

351 0

தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதி,சமய,வேறுபாடுகள் எம்மத்தியில் இருந்தாலும் தமிழ் மொழி மூலம் நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். பிளவுபட்டு இருக்கும் மக்களை ஒன்றுபடுத்தும் நிகழ்வாக மே18 இருக்கவேண்டும் என தெரிவித்தார்.