ஹட்டன் – பொகவந்தலாவை பிரதேசத்தின் தோட்டப்பகுதியொன்றில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர் இன்று மதியம் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இதன் போது காயமடைந்த 6 பேர் பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
அவர்களின் நிலை கவலைகிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

