கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

