சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் அவர்களை சிறைப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்விடயத்தில் தலையிடுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, டிரான் அலஸ்,விமல் வீரவன்ச,சானக வகும்பர,பிரேம்நாத் சி தொலவத்தே, நிமல் பியதிஸ்ஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேமசிங்க உட்பட எதிர்க்கட்சியினர் பலர் வெள்ளிக்கிழமை (12) கண்டி மல்வத்து மஹா விகாரை,அஸ்கிரிய விகாரையின் மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் அவர்களை சிறைப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்விடத்தில் தலையிடுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இதன்போது மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பேச்சுரிமையை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.இதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை.எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக பொது கொள்கையின் அடி ப்படையில் செயற்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

