தற்போதைய அரசாங்கம் யாருடையது என்ற கேள்வி எழுவதாக சமவுடமை மக்கள் முன்னணியின் செயலாளர் ராஜா கொல்லுரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் அமைச்சர்கள் பலர் இந்த அரசாங்கம் யாருடையது? என்பதை விளக்க முயற்சித்துள்ளனர்.
அத்துடன், தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினர் அரசாங்கத்தை முன் நின்று நடத்த முயற்சிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களது கருத்துக்களும் ஜனாதிபதியினது நிலைப்பாடுகளும் பின்தல்லப்படுவதாக ராஜா கொல்லுரே குறிப்பிட்டுள்ளார்.

