வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்(காணொளி)

314 0

வடக்கு மாகாண சபை, சுகாதார தொண்டர்களை உள்வாங்குவதற்கு கல்வித் தராதரம் தொடர்பான நியதிச் சட்டத்தில் உள்வாங்கல் ஒன்றை உருவாக்கி சுகாதார தொண்டர்களின் நியமனத்திற்குரிய தடையை நீக்கிக்கொள்ளலாமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், கருத்து வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை இன்று சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை சித்தியடையாத தொண்டர்களுக்கு நியமனம் வழங்கியதை சுட்டிக்காட்டி சிவமோகன் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதார தொண்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கல்விப் பொதுச் சாதாரணதரம் சித்தி எய்திய சான்றிதழ் தேவை இல்லை எனவும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நியதிச் சட்டத்தில் ஒரு உள்வாங்கலை செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் எனவும் சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் இன்று சந்தித்தார்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக, இன்று 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை

சந்தித்து கலந்துரையாடிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், அவர்களது நியமனம் தொடர்பில் கலந்துரையாடியிருந்ததுடன்

தமக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை சுகாதார தொண்டர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.