வட மத்திய மாகாண சபையின் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
அண்மையில் மாகாண அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கே.எச். நந்தசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
33 உறுப்பினர்களைக் கொண்ட வடமத்திய மாகாண சபையில், மொத்தமாக 21 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்குள் உள்ளனர்.
அவர்களில் 17 பேர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய சந்திப்பின் போது மாகாண சபையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடமத்திய மாகாண சபையின் கட்டுப்பாடு தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

