மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக கறுப்புப் பூனைகள் கொழும்பை வந்தடைந்துள்ளன!

205 0

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக கறுப்புப் பூனைகள் என அழைக்கப்படும் இந்தியக் கொமாண்டோப் படையினர் கொழும்பை வந்தடைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெறும் ஐநா வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை சிறிலங்காவுக்கு வருகைதரவுள்ளார்.

நாளை பிற்பகல் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 6000 காவல்துறையினரை ஈடுபடுத்தியுள்ளது.

அதேவேளை, இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு அதிரடிப்படையான கறுப்புப் பூனைகள் படையணியும் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளது. அத்துடன் இந்தியப் பிரதமர் பயணம் செய்யும் மற்றும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளும் ஏற்கனவே வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.