மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பு

242 0

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் நீதிமன்றங்களில் பூர்த்தி செய்யப்படாத வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விசாரணை செய்வதே இதன் நோக்கமாகும்.

இவ்வருடம் மார்ச் மாதம் அளவில் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 5749 வழக்குகளும், வர்த்தக நீதிமன்றங்களில் 5580 வழக்குகளும், ஏனைய மேல்நீதிமன்றங்களில் 16 ஆயிரத்து 574 வழக்குகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

மேல்நீதிமன்றங்களில் 75 பேரே தற்போது நீதிபதிகளாக கடமையாற்றி வருகின்றனர். இத் தொகையை 85 ஆக அதிகரிப்பதற்காக அமைச்சரவையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது