பௌத்தர் அல்லாத ஒருவர் சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதி- கம்மம்பில

400 0

உலகில் பௌத்த நாடுகள் இருக்கின்ற நிலையில், மகாயான, தந்திரயான கொள்கை கொண்ட பௌத்த தலைவர்கள் பலர் உலகில் உள்ளபோது,  புத்தர் பெருமானம் பிறந்த தினத்தை சர்வதேச ரீதியில் கொண்டாடுவதற்கான நிகழ்வில், பௌத்தர் அல்லாத ஒருவரை அழைத்திருப்பது விஷனத்துக்குரிய ஒன்று என தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

அரசாங்கத்தின் போக்கு என்ன என்பது இதன் மூலம் தெளிவாவதாகவும், உலகில் பௌத்தர்கள் இல்லையென்பதை உலகிற்கு சொல்ல அரசாங்கம் முயற்சிப்பதாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச வெசாக் தின நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் இலங்கை வருகை தரவுள்ளார். இவரது விஜயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.