மத்திய மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சராக எம். ராமேஸ்வரன்

206 0

மத்திய மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சு, மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் நிலுக்கா ஏக்கநாயக்க முன்னிலையில், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நேற்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.