பிரான்ஸ் புதிய ஜனாதிபதியாக இமாலுவேல் மெக்கோன் தெரிவு

316 0

பிரான்ஸ் புதிய ஜனாதிபதியாக இமாலுவேல் மெக்கோன் (Emmanuel Macron) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மரையன் லூபென் (Marine Le Pen) யை எதிர்த்து போட்டியிட்ட அவர் 66.6 வீத மான வாக்குகளை பெற்றார்.

மரையன் லூபென் (Marine Le Pen) 33.9 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பின் போது, பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து இவர்கள் இருவரும் முன்னிலை பெற்ற நிலையில் நேற்றைய தினம் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இடம்பெற்றது.

லூபென், பிரான்சின் குடிவரவு கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

அதுபோல் யூரோ நாணய குழுமத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.

எனினும், மெக்கோன் அதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழு ஆதரவினை வெளிப்படுத்தி வந்தார்.

இந்தநிலையில், பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள 39 வயதான இமாலுவேல் மெக்கோன் இள வயதில் ஜனாதிபதியாக தெரிவானவர் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.