பாகிஸ்தானில் செல்போனைவிட மலிவான விலையில் கிடைக்கும் துப்பாக்கிகள்

405 0

201607291249316378_Guns-are-available-at-cheap-prices-in-pakistan_SECVPFபாகிஸ்தானில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. அது தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்வதாக சர்வதேச நாடுகள் வர்ணிக்கின்றன. இங்கு தலிபான்கள், ஹக்கானி, அல்கொய்தா, ஐ.எஸ். என பல தீவிரவாத குழுக்கள் உள்ளன.
இவர்கள் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களின் செல்வாக்கு அங்கு கொடி கட்டி பறக்கிறது.

பெஷாவரில் இருந்து தெற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் டாரா அதாம்கெல் என்ற நகரம் உள்ளது. அங்கு தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்தல், கார்களை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்தல் போன்ற தொழில் பிரதானமாக நடக்கிறது.

கள்ள சந்தையில் துப்பாக்கிகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் தாராளமாக மலிவு விலையில் கிடைக்கின்றன. அங்கு கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷியபடைகளுக்கு எதிராக போராடிய தீவிரவாதிகளுக்கு முஜாகிதீன்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத விற்பனையை தொடங்கினார்கள்.

தற்போது அதே நிலைதான் தொடர்கிறது. இப்போது இது தலிபான் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. முன்பு முஜாகிதீன்கள் செய்த ஆயுத கடத்தல் மற்றும் விற்பனை தொழிலை தற்போது இவர்கள் மேற்கொள்கின்றனர்.

இங்கு துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக விற்பனை ஆகின்றன. அதுவும் செல்போனை விட விலை குறைவான விலையில் கிடைக்கின்றன.

இங்கு ஆட்சி நடத்தும் தலிபான் தீவிரவாதிகள் கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்துகின்றனர்.