டில்லியில் பாடசாலை அருகே வாயுக்கசிவு – 200 மாணவர்கள் பாதிப்பு

340 0

டில்லியின் துல்லக்பாத் பகுதியில் உள்ள பாடசாலை அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் சுமார் 200 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

டில்லியில் உள்ள துல்லக்பாத் பகுதியில் விடுதியுடன் அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களே இந்த அனர்த்ததுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இன்று காலை மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது குறித்த பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நச்சுவாயு கலந்த காற்றை சுவாசித்த சுமார் 200 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.