ஈராக்கில் ஐ.எஸ். தீவிராவதிகளுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலில் 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஈராக்கின் மேற்கு மொசூல் நகரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனூடாக மொசூலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த காவற்துறை படை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மொசூல் பகுதியை இராணுவம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது.
தற்போது மேற்கு மொசூலில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை ராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரை முழுமையாக மீட்க ஈராக் படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

